தேசிய செய்திகள்

75 வயதாகும் எனது தாயை மோடி அரசு பழிவாங்குகிறது -ராபர்ட் வதேரா குற்றச்சாட்டு + "||" + Robert Vadra lashes out at Modi govt on Facebook

75 வயதாகும் எனது தாயை மோடி அரசு பழிவாங்குகிறது -ராபர்ட் வதேரா குற்றச்சாட்டு

75 வயதாகும் எனது தாயை மோடி அரசு பழிவாங்குகிறது -ராபர்ட் வதேரா குற்றச்சாட்டு
75 வயதாகும் எனது தாயை மோடி அரசு பழிவாங்குகிறது என ராபர்ட் வதேரா குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், சோனியா காந்தியின் மருமகனுமான ராபர்ட் வதேரா, ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனம் ராஜஸ்தானில் நில மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். லண்டனில் சொத்து வாங்கிய விவகாரத்தில் நிதி மோசடி தொடர்பாக அமலாக்கப்பிரிவு டெல்லியில் அவரிடம் தொடர்ந்து மூன்று நாட்கள் விசாரணையை நடத்தியது. இதற்கிடையே ராஜஸ்தான் நிலமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ராபர்ட் வதேரா முன்ஜாமின் பெற்றார். 

இவ்வழக்கு விசாரணையில் வதேரா மட்டுமட்டுமின்றி அவரது தயார் மவுரினிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் நில விவகாரம் தொடர்பான விசாரணைக்காக ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வதேராவும், மவுரினும் ஆஜரானர்கள்.  முன்னதாக பேஸ்புக்கில் வெளியிட்ட தகவலில்,
75 வயதாகும் எனது தாயை மோடி அரசு பழிவாங்குகிறது என ராபர்ட் வதேரா குற்றம் சாட்டியிருந்தார். 

ராபர்ட் வதேரா வெளியிட்ட செய்தியில்,  கடந்த 4 1/2 ஆண்டுகளாக எதும் செய்யாமல், தேர்தல் வரவுள்ள நிலையில்  என்னை விசாரணைக்கு அழைப்பது அரசியல் மட்டும்தான். இது பா.ஜனதாவின்  தேர்தல் வித்தை என மக்கள் நினைக்க மாட்டார்களா? இதில் என்னை மட்டுமல்லாது, 75 வயதாகும் எனது தாயை விசாரணைக்காக அழைத்திருப்பது அரசின் மிக மோசமான பழிவாங்கும் அரசியலையே காட்டுகிறது. மூத்த குடிமக்களை இவ்வாறு அலைக்கழிப்பது என்ன நியாயம்? என கேள்வியை எழுப்பியுள்ளார். மகளை இழந்த என்னுடைய தாயை என்னுடன் தங்கியிருக்குமாறு கூறினேன். அதற்காக அவர் விசாரணை என்ற பெயரில் கொடுமையை அனுபவிப்பது எந்த விதத்தில் நியாயம்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் ராபர்ட் வதேரா.

தொடர்புடைய செய்திகள்

1. மோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு -கருத்து கணிப்பில் தகவல்
44 சதவீதம் பேர் மோடிதான் மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர் என கருத்து கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
2. அமேதியில் ராகுலுக்கு கடுமையான சவால்; வயநாட்டிலிருந்து எம்.பி. ஆவாரா?
உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு கடுமையான சவால் இருப்பதாக கருத்துக்கணிப்பு தகவல் தெரிவிக்கிறது.
3. கருத்துக்கணிப்பு தகவலால் பா.ஜனதாவினர் மகிழ்ச்சி, மே 23-க்கு காத்திருக்கும் காங்கிரஸ்
கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜனதாவினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. தேர்தல் முடிவு வெளியாகும் வரையில் காத்திருக்கலாம் என காங்கிரஸ் கூறுகிறது.
4. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகம்: பிரதமர் மோடிக்கு முகம்மது நஷீத் வாழ்த்து
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக உள்ள நிலையில், மாலத்தீவு முன்னாள் அதிபர் முகம்மது நஷீத் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
5. கோவை தொகுதியில் கடும் போட்டிக்கு இடையே பா.ஜனதா முன்னிலை - தந்தி டிவி
கோவை தொகுதியில் கடும் போட்டிக்கு இடையே பா.ஜனதா முன்னிலை பெறுகிறது என தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.