தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகி விட்டது; பா.ஜ.க. பொது செயலாளர் முரளிதரராவ்


தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகி விட்டது; பா.ஜ.க. பொது செயலாளர் முரளிதரராவ்
x
தினத்தந்தி 12 Feb 2019 3:54 PM GMT (Updated: 12 Feb 2019 3:54 PM GMT)

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகி விட்டது என பா.ஜ.க. பொது செயலாளர் முரளிதரராவ் தெரிவித்து உள்ளார்.

புதுச்சேரி,

நாடாளுமன்றத்திற்கான மக்களவை தேர்தல் இந்த வருடம் நடைபெற உள்ளது.  இதற்காக ஆளும் பாரதீய ஜனதா, எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைப்பதற்காக பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழகத்தில் கூட்டணி அமைப்பது பற்றி பா.ஜ.க. பொது செயலாளர் முரளிதரராவ் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் இன்று பேசினார்.  அவர் பேசும்பொழுது, தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான பா.ஜ.க. கூட்டணி உறுதியாகி விட்டது.

தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து முடிந்து விட்டது.  இன்னும் ஒரு சில நாட்களில் கூட்டணி பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.  தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி மிக பெரிய வெற்றி பெறும் என தெரிவித்து உள்ளார்.

Next Story