தேசிய செய்திகள்

‘ரபேலுக்கும், ராகுல் குற்றச்சாட்டுக்கும் தொடர்பு இல்லை’ - ரிலையன்ஸ் நிறுவனம் மறுப்பு + "||" + 'Rafael and Rahul allegations No contact' - Reliance company denies it

‘ரபேலுக்கும், ராகுல் குற்றச்சாட்டுக்கும் தொடர்பு இல்லை’ - ரிலையன்ஸ் நிறுவனம் மறுப்பு

‘ரபேலுக்கும், ராகுல் குற்றச்சாட்டுக்கும் தொடர்பு இல்லை’ - ரிலையன்ஸ் நிறுவனம் மறுப்பு
ரபேலுக்கும், ராகுல் குற்றச்சாட்டுக்கும் தொடர்பு இல்லை என ரிலையன்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

ரபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு முன்பே அனில் அம்பானி தெரிந்து வைத்திருந்தார் என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு கூறி உள்ள நிலையில், அதை ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்து உள்ளது.

இதுபற்றி அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-


காங்கிரஸ் கட்சியால் குறிப்பிடப்பட்டுள்ள மின் அஞ்சல், ஏர்பஸ் மற்றும் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனங்கள் இடையேயானது. இது மேக் இன் இந்தியா (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டத்தின் கீழான சிவில் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் திட்டங்கள் தொடர்பானது.

உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றிய விவாதம், ஏர்பஸ் ஹெலிகாப்டர், ரிலையன்ஸ் இடையேயான ஒத்துழைப்பு தொடர்பானது ஆகும். பிரான்ஸ் அரசுக்கும், இந்திய அரசுக்கும் இடையேயான 36 ரபேல் போர் விமான கொள்முதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கும், இதற்கும் தொடர்பு இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஏர்பஸ் நிறுவன அதிகாரியின் மின் அஞ்சலுக்கும், ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெளிவுபடுத்தி உள்ளது.