தேசிய செய்திகள்

மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது + "||" + RS passes Motion of Thanks on President's address

மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது

மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது
எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

பட்ஜெட் கூட்டத்தொடரின் துவக்கத்தில் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று மாநிலங்களவையில் விவாதம் எதுவும் இன்றி நிறைவேற்றப்பட்டது. 

ஜனவரி 31 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியதில் இருந்தே ரபேல் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால், குடியுரிமை சட்ட திருத்த மசோதா உட்பட எந்த மசோதாவும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படாமலே உள்ளது. 

மாநிலங்களவையில் நடப்பு  பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று,  ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மட்டும் எந்த விவாதமும் இன்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.  

தொடர்புடைய செய்திகள்

1. ஜனாதிபதியுடன் அமித்ஷா சந்திப்பு
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை அமித்ஷா நேற்று சந்தித்தார்.
2. தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டாக ஜனாதிபதியை சந்தித்து புதிய கோரிக்கையை முன்வைக்க திட்டம் என தகவல்
தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டாக ஜனாதிபதியை சந்தித்து புதிய கோரிக்கையை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிகின்றன.
3. ஜனாதிபதியின் தலையில் கை வைத்து ஆசி வழங்கிய 106 வயது பெண் - பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் நெகிழ்ச்சி சம்பவம்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் இருந்து பத்மஸ்ரீ விருது பெற்றுக்கொண்ட 106 வயது பெண் ஒருவர், ஜனாதிபதியின் தலையில் கை வைத்து ஆசி வழங்கிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.
4. அமைதியை விரும்பும் இந்தியா, தேவைப்படும்போது முழுவலிமையையும் பயன்படுத்த தயங்காது - ராம்நாத் கோவிந்த்
அமைதியை விரும்பும் இந்தியா, தேவைப்படும்போது முழுவலிமையையும் பயன்படுத்த தயங்காது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
5. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று கோவை வருகை
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோவை வருகிறார். அவர் சூலூர் விமான படைதளம், ஈஷா யோக மைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.