தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் லேசான அளவில் நிலநடுக்கம் + "||" + Mild tremors experienced in Palghar

மகாராஷ்டிராவில் லேசான அளவில் நிலநடுக்கம்

மகாராஷ்டிராவில் லேசான அளவில் நிலநடுக்கம்
மகாராஷ்டிராவில் இன்று லேசான அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்தின் சில பாகங்களில் இன்று லேசான அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 3.1 ஆக பதிவாகி உள்ளது.  இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது பிற சேதவிவரங்கள் வெளியாகவில்லை.

கடந்த வருடம் நவம்பரில் இருந்து இதுபோன்ற நிலநடுக்கங்கள் மகாராஷ்டிராவில் தொடர்ச்சியாக விட்டு விட்டு உணரப்பட்டு வருகின்றன.

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் கடந்த 1ந்தேதி 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கம் அன்று மதியம் 2.06, 3.53 மற்றும் மாலை 4.57 மணி அளவில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் முறையே 4.1, 3.6 மற்றும் 3.5 என்ற அளவில் பதிவானது.

இதனால் அந்த பகுதியில் கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டது. அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளியில் தஞ்சம் புகுந்தனர்.  தஹானு மற்றும் தலசாரி பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

வீடுகளில் இருந்து மக்கள் ஓடி சென்றதில் 2 வயது சிறுமி கீழே விழுந்து காயமடைந்து பின் உயிரிழந்தது.

தொடர்ந்து கடந்த 7ந்தேதியும் பால்கரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இதனால் அரசு நிர்வாகம், இதுபோன்ற அவசர காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி கடந்த 12ந்தேதியில் இருந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.  இது வருகிற 21ந்தேதி வரை நடைபெறும்.

தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்தின் மில்போர்டு சவுண்ட் பகுதியில் கடுமையான நிலநடுக்கம்
நியூசிலாந்தின் மில்போர்டு சவுண்ட் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
2. நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்
நிக்கோபார் தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
3. ஈரானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆக பதிவு
ஈரான் நாட்டின் கேர்மன்சா நகரில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆக பதிவானது.
4. அருணாசல பிரதேசத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
5. பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் 16 பேர் பலி
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 16 பேர் பலியாகி உள்ளனர்.