தேசிய செய்திகள்

மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் : முலாயம் சிங் யாதவ் பேச்சால் மக்களவையில் பரபரப்பு + "||" + Modi needs to come again as prime minister Mulayam Singh Yadav spoke Thrills in Lok Sabha

மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் : முலாயம் சிங் யாதவ் பேச்சால் மக்களவையில் பரபரப்பு

மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் : முலாயம் சிங் யாதவ் பேச்சால் மக்களவையில் பரபரப்பு
மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என மக்களவையில் முலாயம்சிங் யாதவ் தெரிவித்தார்.
புதுடெல்லி,

பாராளுமன்ற கூட்டத்தின் கடைசி நாள் இன்று  என்பதால், இன்று பேசிய பல கட்சித்தலைவர்கள் உருக்கமாக உரையாற்றினர். உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவருமான முலாயம் சிங் யாதவ் பேசுகையில்,

எதிரே அமர்ந்திருந்த மோடியை பார்த்து, “நீங்கள் மீண்டும் பிரதமராக வாழ்த்துகிறேன்” என்று பேசினார். நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும்; எங்களது விருப்பத்திற்கான பிரதமர் நீங்கள்தான் என கூறினார்.  அப்போது அவரின் அருகே காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அமர்ந்திருந்தார்.

பாஜகவை முழு மூச்சாக எதிர்க்க மாயாவதியுடன் கைகோர்த்து அவரது மகன்  அகிலேஷ் யாதவ் செயலாற்றி வரும் நிலையில், அவரது தந்தை முலாயம் சிங் யாதவ், மோடிக்கு ஆதரவாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. பாஜக அரசாங்கம் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் 100 சதவிகிதத்திற்கும் மேல் உழைத்துள்ளது - பிரதமர் மோடி
பாஜக அரசாங்கம் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் 100 சதவிகிதத்திற்கும் மேல் உழைத்துள்ளது என பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசினார்.
2. மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் காங்கிரஸ் அரசுக்கும் பாஜக அரசுக்கும் எந்த வித்தியாசமுமில்லை -தம்பிதுரை ஆவேசம்
மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் காங்கிரஸ் அரசுக்கும் பாஜக அரசுக்கும் எந்த வித்தியாசமுமில்லை என மத்திய அரசு மீது தம்பிதுரை குற்றஞ்சாட்டினார்.
3. நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல்
நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. காவிரி விவகாரம்; மாநிலங்களவையில் பதாகைகள் ஏந்தி அ.தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம்
காவிரி விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பதாகைகள் ஏந்தி அ.தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.