ஆந்திராவில் விவசாயிகளுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை சந்திரபாபு நாயுடு அறிவிப்பு


ஆந்திராவில் விவசாயிகளுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Feb 2019 6:30 PM GMT (Updated: 13 Feb 2019 5:56 PM GMT)

ஆந்திராவில் விவசாயிகளுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

அமராவதி,

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த 1–ந் தேதி நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தொகை 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், ஆந்திர அரசும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் என ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்து உள்ளார்.


Next Story