தேசிய செய்திகள்

இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியல்: 3 நகரங்கள் டெல்லியை பின்னுக்கு தள்ளின + "||" + 3 Cities Beat Delhi To "India's Most Polluted" List. Top Spot Goes To...

இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியல்: 3 நகரங்கள் டெல்லியை பின்னுக்கு தள்ளின

இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியல்:  3 நகரங்கள் டெல்லியை பின்னுக்கு தள்ளின
இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியலில் டெல்லியை மூன்று நகரங்கள் பின்னுக்கு தள்ளின.
புதுடெல்லி,

உலக அளவில் காற்றின் தரம் மோசமாக உள்ள நகரங்கள் பட்டியலில் டெல்லி முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், நடப்பு ஆண்டு ஐஐடி கான்பூர் நடத்திய ஆய்வு ஒன்றில், காற்று மாசில் டெல்லியை மூன்று இந்திய நகரங்கள் விஞ்சியது தெரிய வந்துள்ளது. பீகார் தலைநகர் பாட்னா, உத்தர பிரதேசத்தில் உள்ள கான்பூர், வாரணாசி ஆகிய மூன்று நகரங்கள் டெல்லியை காற்று  மாசில் முந்தியுள்ளன. 

கடந்த ஆண்டு  அக்டோபர் மற்றும் நவம்பரில் நடத்தப்பட்ட ஆய்வில், மேற்கண்ட முடிவுகள் தெரிய வந்துள்ளன. சீனாவை விட இந்தியா 50 சதவீதம் அதிகம் காற்று மாசு கொண்ட நாடாக உள்ளது. மேற்கூறிய மூன்று நகரங்களிலும் காற்றில் மாசு அளவு 2.5 பிஎம் என்ற அளவில் இருந்துள்ளது. இந்த அளவானது, தீவிர சுகாதார பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் கொண்டவை ஆகும். 

பாட்னா நகரம் அதிக காற்று மாசு கொண்ட நகரம் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள  பீகார் துணை முதல் மந்திரி சுஷில் குமார் மோடி, “ புள்ளி விவரங்களை நாங்கள் பார்த்தோம். பாட்னா நகரம் முதல் இடம் பெற்றிருப்பது எங்களுக்கு கவலை அளிக்கிறது. சில செயல் திட்டங்களை நாங்கள் வகுத்துள்ளோம். அதை செயல்படுத்த முயற்சித்துக் கொண்டு இருக்கிறோம்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் கடும் பனி மூட்டம்: 12 ரயில்கள் தாமதம்
டெல்லியில் கடும் பனி மூட்டம் நிலவியது. இதன் காரணமாக 12 ரயில்கள் தாமதம் ஆகின.
2. டெல்லியில் இருந்து பாகிஸ்தான் தூதர் சொந்த நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்
டெல்லியில் இருந்து பாகிஸ்தான் தூதர் தனது சொந்த நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
3. டெல்லியில் 1,965 பேருக்கு பன்றி காய்ச்சல்
டெல்லியில் 1,965 பேருக்கு பன்றி காய்ச்சல் நோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
4. டெல்லி அதிகார மோதல் வழக்கில் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு: வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்
டெல்லி அதிகார மோதல் வழக்கில் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. இதையடுத்து, வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
5. டெல்லி நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு
டெல்லி நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...