தேசிய செய்திகள்

வீட்டு பணிப்பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தல்; மூத்த கப்பற்படை அதிகாரி மீது வழக்கு பதிவு + "||" + Naval officer booked for 'molesting' domestic help in Goa

வீட்டு பணிப்பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தல்; மூத்த கப்பற்படை அதிகாரி மீது வழக்கு பதிவு

வீட்டு பணிப்பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தல்; மூத்த கப்பற்படை அதிகாரி மீது வழக்கு பதிவு
கோவாவில் வீட்டு பணிப்பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மூத்த கப்பற்படை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பனாஜி,

கோவாவில் உள்ள இந்திய கப்பற்படையின் ஹன்சா கப்பற்தளத்தில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வருபவர் மணிகண்டன் நம்பியார் (வயது 46).  இவரது இல்லம் தெற்கு கோவாவின் வாஸ்கோ நகரில் அமைந்துள்ளது.

இங்கு வைத்து மூத்த அதிகாரி தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என அவரது வீட்டின் பணிப்பெண் ஒருவர் போலீசாரிடம் புகார் தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து ஐ.பி.சி.யின் 354, 354-ஏ, 354-பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.  உடனே உள்ளூர் நீதிமன்றமொன்றில் அந்த அதிகாரி முன்ஜாமீன் பெற்று விட்டார்.