இந்திய தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம்


இந்திய தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம்
x
தினத்தந்தி 14 Feb 2019 12:28 PM GMT (Updated: 14 Feb 2019 12:28 PM GMT)

இந்திய தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் இந்த வருடம் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலுக்கான கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தையில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையர் பதவிக்கு சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.  கடந்த 1980ம் ஆண்டின் இந்திய வருவாய் பணி (வருவாய் வரி பிரிவு) அதிகாரியாக பதவியேற்ற இவர் ஐ.ஐ.டி.யில் படித்தவர்.

இவர் மத்திய நேரடி வரிகள் விதிப்பு தலைவராக பதவி வகித்து வருகிறார்.  இந்த பதவி காலம் 2019ம் ஆண்டு மே மாதம் வரை உள்ளது.  கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 2ந்தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், அசோக் லாவாசா மற்றும் சந்திரா பிற ஆணையர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.  மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story