தீவிரவாதிகள் தாக்குதல் : பிரதமர் மோடி தலைமையில் அவசர மத்திய அமைச்சரவை குழு கூட்டம்


தீவிரவாதிகள் தாக்குதல் : பிரதமர் மோடி தலைமையில்  அவசர மத்திய அமைச்சரவை குழு கூட்டம்
x
தினத்தந்தி 15 Feb 2019 5:05 AM GMT (Updated: 15 Feb 2019 5:05 AM GMT)

பாதுகாப்புக்கான அவசர மத்திய அமைச்சரவை குழு கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை தொடங்கியது.

புதுடெல்லி,

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு திரும்பிக்கொண்டிருந்த 78 வாகனங்களில் மொத்தம் 2,500 பாதுகாப்புப் படை வீரர்கள் பயணித்தனர். புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா பகுதியில், பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் மீது  திடீர் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் 44 பாதுகாப்புப் படை வீரர்களின் உயிரிழந்தனர். இதற்கு ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை இன்று காலை 9.15-க்கு கூடியது.

பிரதமரின் இல்லத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில்  மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், அருண்ஜெட்லி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்று உள்ளனர்.

Next Story