தேசிய செய்திகள்

திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி + "||" + Cancel the wedding ceremony Rs 11 lakh To the family of dead soldiers Surat couple presented

திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி

திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி
திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு அதற்காகும் செலவுடன் சிறிது பணத்தை சேர்த்து ரூ. 11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க சூரத் தம்பதி முன்வந்துள்ளனர்.
புதுடெல்லி,

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடத்தப்பட்டன. 

ஜம்மு காஷ்மீர் டோடா மாவட்டத்தில் பாஜகவினர் தீவிரவாதத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

ராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்கள் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கைகளில் தீபங்களை ஏந்தி ரெயில் தண்டவாளங்களில் போராட்டம் நடத்தினர்.

இதேபோன்று லே பகுதியில் மெழுகுவர்த்திகளை ஏற்றி அமைதிப்பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் பொதுமக்கள் புல்வாமா தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மும்பையில் உள்ள ஜின்னா இல்லம் அருகே தாக்குதலைக் கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதனை பெரும்திரளாக பொதுமக்கள் நின்று பார்த்து சென்றனர்.

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரவு 8 மணி முதல் 8.15 வரை பெட்ரோல் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர்கள் ஹஸ்முக்பாய் சேத் மற்றும் அஜய் சங்வி. வைர வியாபாரிகள். இவர்களது மகன், மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அத்துடன் 15-ஆம் தேதியான நேற்று திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ராணுவ வீரர்கள் மரணமடைந்த செய்தியை கேட்ட இக்குடும்பத்தினர் திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்தனர். அதன்படி திருமண வரவேற்பை ரத்து செய்ததோடு அனைத்து சம்பிரதாயங்களையும் ரத்து செய்து விட்டனர். மேலும் சமையல், அலங்காரம் உள்ளிட்டவற்றுக்காக ரூ. 5 லட்சம் பேசப்பட்ட நிலையில் மணமக்கள் வீட்டார் மேலும் ரூ. 6 லட்சத்தை சேர்ந்து ரூ. 11 லட்சமாக உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன் வந்துள்ளனர். சூரத் குடும்பத்தின் இந்த மனிதநேய செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.