தேசிய செய்திகள்

பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் + "||" + MHA today issued an advisory to all states & Union Territories to take necessary measures to ensure their safety & security

பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

புதுடெல்லி,

காஷ்மீரில் புலவாமா மாவட்டத்தில் நேற்று முன் தினம் துணை ராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தினர். இந்த கொடிய தாக்குதலில் 40  துணை ராணுவ வீரர்கள் பலியாகினர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத தலைவன் மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றது. இதில் மறுக்க முடியாத ஆதாரமும் இந்தியாவின் வசம் கிடைத்துள்ளது. மேலும், இதில் பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ. உதவிக்கரம் நீட்டி இருக்கும் எனவும் நம்பப்படுகிறது.

பயங்கரவாத தாக்குதலை கண்டித்து காஷ்மீரில் நேற்று முழு அடைப்பு நடந்தது. இதில் வன்முறை வெடித்தது. வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. நிலைமை கட்டுக்கு அடங்காத நிலையில், ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.

இந்தநிலையில், புல்வாமா போன்று மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல்கள் வருவதாக காஷ்மீர் மக்கள் அஞ்சுவதை தொடர்ந்து பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.