படிப்புக்கு பாதிப்பு; பள்ளி மாணவன் கடிதத்திற்கு நடவடிக்கை என முதல் மந்திரி உறுதி


படிப்புக்கு பாதிப்பு; பள்ளி மாணவன் கடிதத்திற்கு நடவடிக்கை என முதல் மந்திரி உறுதி
x
தினத்தந்தி 16 Feb 2019 11:18 AM GMT (Updated: 16 Feb 2019 11:18 AM GMT)

படிப்புக்கு பாதிப்பு என பள்ளி மாணவன் எழுதிய கடிதத்திற்கு நடவடிக்கை எடுக்க முதல் மந்திரி உறுதி அளித்துள்ளார்.

ஜபுவா,

மத்திய பிரதேச முதல் மந்திரியாக காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் பொறுப்பு வகித்து வருகிறார்.  இவருக்கு சமீபத்தில் கடிதம் ஒன்று வந்துள்ளது.  இதனை ஜபுவா நகரின் மதுரானி கிராமத்தில் உள்ள பள்ளி கூடமொன்றில் படித்து வரும் ஹிமன்ஷு சோனி என்ற எட்டாம் வகுப்பு மாணவன் எழுதியுள்ளான்.

இதில், படிக்கும் நேரத்தில் அதிக அளவு ஒலி எழுப்பும் டிஸ்க் ஜாக்கிகளால் (இசை நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள்) படிப்பு பாதிக்கப்படுகிறது.  இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து உள்ளான்.  இதனை கட்டுப்படுத்துவது விலங்குகள் மற்றும் பறவைகளுக்கும் பலன் அளிக்கும் என தெரிவித்து உள்ளான்.  அதிகபட்ச டெசிபல் அளவு பற்றிய உத்தரவுகள் அங்கு அமலில் இருந்து வருகிறது.  எனினும், இந்த கடிதம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல் மந்திரி உறுதி அளித்து உள்ளார் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story