தேசிய செய்திகள்

காஷ்மீர் தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் கண்டனம் + "||" + Bangladesh PM condemns attack on Kashmir

காஷ்மீர் தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் கண்டனம்

காஷ்மீர் தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் கண்டனம்
காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டாக்கா,

காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் படையினர் மீது ஜெய்ஷ்–இ–முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.


இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் அனுப்பியுள்ள செய்தியில், ‘புலவாமா மாவட்டத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு உயிரிழந்த வீரர்களுக்கு வங்கதேச மக்கள் சார்பிலும், என் சார்பிலும், அரசு சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தாக்குதல் கடும் கண்டனத்துக்கு உரியது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதைப்போல வங்காளதேச வெளியுறவுத்துறை மந்திரி ‌ஷரியர் ஆலமும் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு தடை விதிப்பு: மத்திய அரசு மீது காஷ்மீர் கட்சிகள் பாய்ச்சல்
பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீர் உடனான எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு தடை விதித்ததை காஷ்மீர் அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளன.
2. தென்கொரியாவில் கத்திக்குத்து தாக்குதலில் சிறுமி உள்பட 5 பேர் பலி: காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்
தென்கொரியாவில் கத்திக்குத்து தாக்குதலில் சிறுமி உள்பட 5 பேர் பலியாயினர். இதற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
3. கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட கணவன்-மனைவி மீது தாக்குதல், ஒருவர் கைது
கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட கணவன்-மனைவியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
4. காஷ்மீர் புல்வாமாவில் துப்பாக்கி சண்டை: லஸ்கர் தளபதி உள்பட 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில், லஸ்கர் இ தொய்பா தளபதி உள்பட 4 பயங்கரவாதிகள் பலியானார்கள்.
5. ஈராக்கில் தாக்குதல்: பாதுகாப்பு படையினர் 2 பேர் பலி - ஒரு ஐ.எஸ். பயங்கரவாதியும் உயிரிழப்பு
ஈராக்கில் நடந்த தாக்குதலில், ஐ.எஸ். பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்ததுடன், பாதுகாப்பு படையினர் 2 பேர் பலியாயினர்.