லண்டனில் சொத்து வாங்கியதாக வழக்கு: ராபர்ட் வதேராவின் இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு - டெல்லி கோர்ட்டு உத்தரவு


லண்டனில் சொத்து வாங்கியதாக வழக்கு: ராபர்ட் வதேராவின் இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு - டெல்லி கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 16 Feb 2019 9:15 PM GMT (Updated: 16 Feb 2019 7:52 PM GMT)

லண்டனில் சொத்து வாங்கிய வழக்கில், ராபர்ட் வதேராவின் இடைக்கால ஜாமீனை நீட்டித்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா, லண்டனில் சொத்து வாங்கியதாகவும், அதில் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இவ்வழக்கில் ராபர்ட் வதேராவை கைது செய்யாமல் இருப்பதற்கு டெல்லி தனி கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது.

இந்நிலையில், நேற்று இவ்வழக்கு நீதிபதி அரவிந்த் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராபர்ட் வதேரா சார்பில் ஆஜரான வக்கீல், இது பொய் வழக்கு என்றும், விசாரணைக்கு அழைக்கும்போதெல்லாம் வதேரா ஆஜராவார் என்றும் உறுதி அளித்தார். இதையடுத்து, வதேராவுக்கான இடைக்கால ஜாமீனை மார்ச் 2-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story