தேசிய செய்திகள்

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களை கவுரவிக்கும் வகையில் கர்நாடகாவில் 200 பேர் ரத்ததானம் + "||" + In Karnataka, 200 people donated blood to honour the killed CRPF personnel

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களை கவுரவிக்கும் வகையில் கர்நாடகாவில் 200 பேர் ரத்ததானம்

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களை கவுரவிக்கும் வகையில் கர்நாடகாவில் 200 பேர் ரத்ததானம்
தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மத்திய துணை ராணுவ படையினரை கவுரவிக்கும் வகையில் கர்நாடகாவில் 200 பேர் ரத்ததானம் அளித்து உள்ளனர்.
சிவமொக்கா,

காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் துணை ராணுவ வீரர்கள் கடந்த வியாழ கிழமை 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர்.  அவர்கள் வாகனத்தின் மீது ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி வெடிகுண்டு ஏற்றிய சொகுசு காரை கொண்டு மோதி வெடிக்க செய்ததில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.  இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து உயிரிழந்த வீரர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மத்திய துணை ராணுவ படையினரை கவுரவிக்கும் வகையில் கர்நாடகாவின் சிவமொக்கா நகரில் இன்று ரத்ததானம் முகாம் நடந்தது.  இதில் கலந்து கொண்டு 200 பேர் ரத்ததானம் அளித்து உள்ளனர்.