காஷ்மீரிகள் மீதான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டனம்


காஷ்மீரிகள் மீதான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டனம்
x
தினத்தந்தி 17 Feb 2019 6:30 PM GMT (Updated: 17 Feb 2019 5:46 PM GMT)

காஷ்மீரிகள் மீதான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

காஷ்மீரில் துணை ராணுவத்தினர் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் காஷ்மீரை சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடந்து வருகின்றன. இந்த தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து கட்சியின் பொலிட்பீரோ குழு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புலவாமாவில் 40 வீரர்கள் கொல்லப்பட்டதால், சோகமும், கவலையும் ஏற்படுவது இயல்புதான். ஆனால் இதை பயன்படுத்தி அப்பாவி காஷ்மீரிகள் மீது தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது. இத்தகைய வெறுப்பு பிரசாரம் மற்றும் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது.

முன்னதாக, புலவாமா தாக்குதலை தொடர்ந்து தங்கள் பகுதிகளில் வசிக்கும் காஷ்மீர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story