தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: புல்வாமாவில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் + "||" + Army Major among four soldiers martyred in overnight encounter with terrorists in Pulwama in South Kashmir

ஜம்மு காஷ்மீர்: புல்வாமாவில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம்

ஜம்மு காஷ்மீர்: புல்வாமாவில் நடந்த துப்பாக்கிச்சண்டையில்  4 ராணுவ வீரர்கள் வீர மரணம்
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
ஸ்ரீநகர்,

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்தனர்.  இந்த கார் குண்டு தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், புல்வாமா மாவட்டத்தில் உள்ள பின்க்லான் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். விடிய விடிய நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில், ராணுவ வீரர்கள் 4 பேர் வீர மரணம் அடைந்தனர். உயிரிழந்த 4 பேரில் ஒருவர் ராணுவ மேஜர் ஆவார்.  வீர மரணம் அடைந்த வீரர்கள் 55 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படைப்பிரிவைச்சேர்ந்தவர்கள் ஆவர். 


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் போர்நிறுத்த மீறல் : துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் வீரமரணம்
நவ்ஷெரா பகுதி எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் போர்நிறுத்தத்தை ஒப்பந்தத்தை மீறி நடத்திய தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
2. ஜம்மு காஷ்மீர் காங்.தலைவர் கைது : ராகுல் காந்தி கண்டனம்
ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
3. ஜம்மு காஷ்மீர்: ஸ்ரீநகரில் தேசியக்கொடி ஏற்றினார் ஆளுநர் சத்யபால் மாலிக்
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் ஆளுநர் சத்யபால் மாலிக் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
4. காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுடன் எப்போதும் உடன்நிற்போம் - பிரதமர் மோடி உறுதி
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுடன் எப்போதும் உறுதுணையாக நிற்போம் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
5. வரும் 5 ஆண்டுகளில் காஷ்மீரில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும் : அமித்ஷா
வரும் 5 ஆண்டுகளில் காஷ்மீரில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.