தேசிய செய்திகள்

கொள்ளை போன ரூ.10 லட்சம் பணம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்வேன்; சட்டசபையில் எம்.எல்.ஏ. கண்ணீர் + "||" + SP MLA breaks down in House, says he has been robbed off Rs 10 lakh

கொள்ளை போன ரூ.10 லட்சம் பணம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்வேன்; சட்டசபையில் எம்.எல்.ஏ. கண்ணீர்

கொள்ளை போன ரூ.10 லட்சம் பணம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்வேன்; சட்டசபையில் எம்.எல்.ஏ. கண்ணீர்
கொள்ளை போன ரூ.10 லட்சம் பணம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்வேன் என சட்டசபையில் எம்.எல்.ஏ. கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
லக்னோ,

உத்தர பிரதேசத்தின் அசம்கார் நகரில் மேகநகர் தொகுதியை சேர்ந்த சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. கல்பநாத் பஸ்வான்.  இவர் சட்டசபையில் இன்று பேசும்பொழுது, அசம்காரில் ஓட்டல் ஒன்றில் இருந்தபொழுது எனது ரூ.10 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது.

நான் மிக ஏழ்மையானவன்.  இந்த சபையில் கைகூப்பி வேண்டி கேட்டு கொள்கிறேன்.  இங்கு எனக்கு நீதி கிடைக்கவில்லை எனில் வேறு எங்கு நான் செல்வேன்.  எனது பணம் திரும்ப கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறினார்.  இதில் எப்.ஐ.ஆர். எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்து பேசிய நாடாளுமன்ற விவகார துறை மந்திரி சுரேஷ் குமார் கன்னா, இதுபற்றி அறிக்கை பெறப்பட்டு நீதி உறுதி செய்யப்படும் என கூறினார்.  எப்.ஐ.ஆர். பதிவு செய்ய அவர் விரும்பினால் அது பதிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சமையல் மாஸ்டரை வழிமறித்து அரிவாள் வெட்டு; பணம்,செல்போன் பறிப்பு
ராமநாதபுரத்தில் சமையல் மாஸ்டரை வழிமறித்து அரிவாளால் வெட்டி பணம் மற்றும் செல்போனை பறித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
2. நாகர்கோவிலில் துணிகரம், எல்.ஐ.சி. அதிகாரி வீட்டில் 22 பவுன் நகை கொள்ளை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. அதிகாரியின் வீட்டில் 22 பவுன் நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
3. தாராவியில் 2 வீடுகளில் நகை, பணம், செல்போன் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
தாராவியில் 2 வீடுகளில் நகை, பணம், செல்போனை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. ரேஷன் கார்டுகளுக்கு அரிசி குறைப்பு; ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கண்டனம்
ரேஷன் கார்டுகளுக்கு திடீரென அரிசி குறைப்புக்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.
5. பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களிடம் பணம் வாங்கிய 6 ஊழியர்கள் பணியிடை நீக்கம் - இணை ஆணையர் நடவடிக்கை
பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களிடம் பணம் வாங்கியதாக கோவில் ஊழியர்கள் 6 பேரை பணியிடை நீக்கம் செய்து இணை ஆணையர் நடவடிக்கை எடுத்து உள்ளார்.