தேசிய செய்திகள்

கணவரின் பாதுகாப்பு பற்றிய வருத்தத்தில் ராணுவ வீரரின் மனைவி தற்கொலை + "||" + Worried about husband's safety, Army jawan's wife kills self

கணவரின் பாதுகாப்பு பற்றிய வருத்தத்தில் ராணுவ வீரரின் மனைவி தற்கொலை

கணவரின் பாதுகாப்பு பற்றிய வருத்தத்தில் ராணுவ வீரரின் மனைவி தற்கொலை
குஜராத்தில் தனது கணவரின் பாதுகாப்பு பற்றிய வருத்தத்தில் ராணுவ வீரரின் மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் பணியாற்றி வரும் ராணுவ வீரர் புபேந்திராசின்ஹ் ஜெத்வா.  இவரது மனைவி மீனாட்சி ஜெத்வா (வயது 22).  குஜராத்தின் தேவபூமி துவாரகா நகரில் கம்பலியா பகுதியில் வசித்து வந்துள்ளனர்.

இந்த தம்பதிக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.  முன்பு ஒருமுறை பணியில் இருந்தபொழுது பனிப்புயலில் இருந்து தப்பி பிழைத்தது பற்றி தனது மனைவியிடம் ஜெத்வா கூறியுள்ளார்.  இந்த நிலையில் அவர் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

அவர் ஊரில் இருந்தபொழுது காஷ்மீரில் துணை ராணுவ படையினர் மீது நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 பேர் பலியானது பற்றிய செய்தி வந்துள்ளது.

இந்நிலையில், விடுமுறை முடிந்து ஜெத்வா பணிக்கு திரும்ப வேண்டியிருந்தது.  இதனால் அவரது மனைவி அதிக வருத்தத்தில் இருந்துள்ளார்.  தனது கணவர் காஷ்மீர் திரும்புவதில் அவருக்கு விருப்பமில்லை.  ஜெத்வாவின் பாதுகாப்பு பற்றிய வருத்தத்தில் இருந்த அவரின் மனைவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இந்த தகவலை விசாரணை மேற்கொண்டு வரும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.