தேசிய செய்திகள்

புல்வாமா தாக்குதலை அரசியல் ஆக்கினால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: காங்கிரஸ் + "||" + People will not forgive any attempt to politicise Pulwama terror attack, says Congress

புல்வாமா தாக்குதலை அரசியல் ஆக்கினால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: காங்கிரஸ்

புல்வாமா தாக்குதலை அரசியல் ஆக்கினால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்:  காங்கிரஸ்
புல்வாமா தாக்குதலை அரசியல் ஆக்கினால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

காஷ்மீரில் இயங்கி வரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் பாதுகாப்பு படையினர் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி பெருத்த சேதங்களை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் புலவாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலை அரசியலாக்கினால் அதனை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டர்கள் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி, இது தொடர்பாக மேலும் கூறுகையில், “
நமது தேசம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொண்டுள்ளது. 

இந்த சூழ்நிலையில் அனைவரும் சுயகட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். இந்த சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதோ, தரக்குறைவான விமர்சனங்களைக் கூறுவதோ கூடாது. இந்த நேரத்தில் எவரது தனிப்பட்ட பெயரையோ அல்லது அரசியல் கட்சியின் பெயரையோ கூறி இதில் அரசியலை இழுக்க நான் விரும்பவில்லை.இந்த பயங்கரவாதத் தாக்குதலை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சித்தாலோ அல்லது மற்றவர்களை விமர்சிக்க இதனைப் பயன்படுத்தினாலோ மக்கள் அதனை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதியின் கூட்டாளி கைது
காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் முத்தாசிர். சமீபத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் அவன் கொல்லப்பட்டான்.
2. பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் யாசின் மாலிக்கின் ஜேகேஎல்எப் அமைப்புக்கு தடை
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் யாசின் மாலிக்கின் ஜேகேஎல்எப் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.
3. பீகாரில் காங்கிரஸ்-ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி உறுதியானது
பீகாரில் காங்கிரஸ் - ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி உறுதியானது.
4. காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி பலி
காஷ்மீர் பண்டிபோரா பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையினர் ஒரு பயங்கரவாதியை சுட்டுக்கொன்றனர். பணய கைதியாக பிடித்துவைத்திருந்த ஒருவரை மீட்டனர். மற்றொருவரை மீட்க முயற்சி நடக்கிறது.
5. தேர்தலில் போட்டியும் கிடையாது, பிரசாரமும் கிடையாது -சல்மான்கான் விளக்கம்
தேர்தலில் போட்டியும் கிடையாது, யாருக்காகவும் பிரசாரமும் கிடையாது என சல்மான்கான் விளக்கம் அளித்துள்ளார்.