தேசிய செய்திகள்

வந்தே பாரத் ரெயில் மீது மூன்றாவது முறையாக கல்வீச்சு, ஜன்னல் சேதமடைந்தது + "||" + Stones pelted on Vande Bharat Express for 3rd time window damaged

வந்தே பாரத் ரெயில் மீது மூன்றாவது முறையாக கல்வீச்சு, ஜன்னல் சேதமடைந்தது

வந்தே பாரத் ரெயில் மீது மூன்றாவது முறையாக கல்வீச்சு, ஜன்னல் சேதமடைந்தது
வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து மூன்றாவது முறையாக கல் வீசப்பட்டுள்ளது.
சென்னை ஐ.சி.எப். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 18 மாதத்தில் கடந்த 2018-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட இந்த ரெயில் முதலில் ரெயில் 18 என அழைக்கப்பட்டது.  அதன்பின் அதற்கு வந்தே பாரத் விரைவு ரெயில் என பெயர் சூட்டினர். டெல்லி-வாரணாசி இடையே வந்தே பாரத் விரைவு ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.  ரெயில் சேவையில் பாதிப்பு நேரிட்டதால் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் மற்றொரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடைபெற்றுள்ளது. ரெயிலில் மூன்றாவது முறையாக கல் வீசப்பட்டுள்ளது, இதனால் ஜன்னல் சேதம் அடைந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி ரெயில் மீது கற்கள் வீசப்பட்டது, பின்னர் பிப்ரவரி 2-ம் தேதியும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது. இதனால் ஏற்பட்ட சேதம் சரிசெய்யப்பட்டது. புதுடெல்லியில் இருந்து ரெயில் கான்பூர் சென்ற போது கற்கள் வீசப்பட்டுள்ளது. இதனால் ஒரு ஜன்னல் சேதம் அடைந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் துண்டலாவில் கற்கள் வீசப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 'வந்தே பாரத்' ரெயில் தாமதம்: பயணிகள் கடும் அதிருப்தி
'வந்தே பாரத்' ரெயில் வர்த்தக ரீதியிலான பயணத்தின் முதல் நாளிலேயே ஒரு மணி நேரம் தாமதமாக சென்று சேர்ந்ததால், பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.