தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக மம்தா பானர்ஜி மத்திய அரசு மீது குற்றச்சாட்டு


தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக மம்தா பானர்ஜி  மத்திய அரசு மீது குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 20 Feb 2019 10:49 AM GMT (Updated: 20 Feb 2019 10:49 AM GMT)

தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக மத்திய அரசு மீது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டி உள்ளார்.

கொல்கத்தா

பாராளுமன்ற தேர்தல் வரும் நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு இடையே மோதல்கள் வலுத்து வருகிறது.

மேற்கு வங்காளத்தில்  மோடிக்கு எதிராக மிகப்பெரிய எதிர்க்கட்சிகள் பேரணியை மேற்கு வங்காள முதல்வரும்,  திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நடத்தி காட்டினார்.  இதை தொடர்ந்து  அம்மாநிலத்தில்  நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மோடி மேற்கு வங்காளத்தில்  ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது என கூறினார்.

இதை தொடர்ந்து சிபிஐ நடவடிக்கைகளுக்கு எதிராக 2 நாட்கள் மம்தா பானர்ஜி  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

தற்போது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக மத்திய அரசு மீது திரிணாமுல்  காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி புகார் கூறியுள்ளார்.  மேற்கு வங்காள முதல்வரும்  திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியதாவது:-

பிப்ரவரி 8 ம் தேதி உளவுத்துறை ஏஜென்சிகளிடம் இருந்து தேர்தலுக்கு முன்னால் தாக்குதல்கள்  நடத்தப்படும் என தகவல்கள் கிடைத்து உள்ளது. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. 78  வாகன அணிவரிசைகளுக்கு ஏன் அனுமதி கொடுக்கப்பட்டது.

தனது  தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகிறது. இதுபோல், ஒட்டுக்கேட்பது ஜனநாயக நாட்டிற்கு விரோதமானது. இதன் மீதான முழு ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. பாஜகவிற்கு ஆதரவாக மதக்கலவரத்தை தூண்ட முயலும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கிற்கு வெற்றி கிடைக்காது என கூறி உள்ளார்.

Next Story