தேசிய செய்திகள்

ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை வழங்கியதே பாகிஸ்தான் ராணுவம்தான், வெளியாகும் அதிர்ச்சி தகவல் + "||" + Pakistani army handed over RDX used in the Pulwama terror attack to JeM terrorists

ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை வழங்கியதே பாகிஸ்தான் ராணுவம்தான், வெளியாகும் அதிர்ச்சி தகவல்

ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை வழங்கியதே பாகிஸ்தான் ராணுவம்தான், வெளியாகும் அதிர்ச்சி தகவல்
புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை வழங்கியதே பாகிஸ்தான் ராணுவம்தான் என தெரியவந்துள்ளது.
புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது தொடர்பாக ஆவணங்களையோ, உளவுத்துறை தகவலையோ தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார். இதற்கிடையே லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மற்றும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி மசூத் அசாரை பாதுகாக்கும் பணியில் பாகிஸ்தான் ராணுவமும், உளவுத்துறையும் ஈடுபட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்கள் சர்வதேச பார்வையில் படுவதை தவிர்க்கும் வகையில் நடவடிக்கையை மேற்கொள்கிறது. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் அங்கு சுதந்திரமாக சுற்றிவருகிறான், மேலும் அரசியல் கட்சியையும் தொடங்க முற்படுகிறான். 

இந்நிலையில் புல்வாமாவில் 40 சிஆர்பிஎப் வீரர்களை கொல்ல பயன்படுத்தப்பட்ட ஆர்டிஎஸ் வெடிகுண்டு பாகிஸ்தான் ராணுவம் வழங்கியது என உளவுத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானின் ராணுவ தலைமையகமான ராவல்பிண்டியில்தான் ஆர்டிஎஸ் வெடிகுண்டு ஜெய்ஷ் பயங்கரவாதிகளிடம் அந்நாட்டு ராணுவம் வழங்கியுள்ளது என தெரிய வந்துள்ளது. இந்தியா அதிரடியான நடவடிக்கையை முன்னெடுக்கலாம் என உஷார் நிலையில் பாகிஸ்தானும் இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
2. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.
3. குல்பூஷண் ஜாதவை, இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி
குல்பூஷண் ஜாதவை, இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
4. ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாசி கைது
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாசி கைது செய்யப்பட்டுள்ளார்.
5. பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் கைது செய்திருப்பது மற்றொரு நாடகம் - இந்திய வெளியுறவுத்துறை
பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் கைது செய்திருப்பது மற்றொரு நாடகம் மட்டும்தான் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.