தேசிய செய்திகள்

காஷ்மீரில் ராணுவத்தில் சேர இளைஞர்கள் ஆர்வம் - 2,000 பேர் குவிந்தனர் + "||" + Young people interested in joining the Army in Kashmir - 2,000 people were accumulating

காஷ்மீரில் ராணுவத்தில் சேர இளைஞர்கள் ஆர்வம் - 2,000 பேர் குவிந்தனர்

காஷ்மீரில் ராணுவத்தில் சேர இளைஞர்கள் ஆர்வம் - 2,000 பேர் குவிந்தனர்
காஷ்மீரில் ராணுவத்தில் சேர இளைஞர்கள் 2,000 பேர் ஆர்வத்துடன் குவிந்தனர்.
ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள கண்டமுல்லா ராணுவ முகாமில் ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு செய்யும் முகாம் நடந்தது. கடும் குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ராணுவத்தில் சேர ஆர்வமாக வந்திருந்தனர். அங்கு அவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டது.


இது தொடர்பான வீடியோ ராணுவத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில், “நாட்டை காக்க ஏராளமான இளைஞர்கள் ராணுவத்துக்கான ஆட்கள் தேர்வில் கலந்துகொண்டு இருக்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ஸ்ரீநகரில் இந்த வார இறுதியிலும் அடுத்த வாரமும் ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு முகாம் நடைபெற உள்ளது என்றனர்.

புலவாமா பகுதியில் துணை ராணுவ படை மீது பயங்கரவாத தாக்குதல் நடந்த சில நாட்களிலேயே ராணுவத்தில் சேர காஷ்மீர் இளைஞர்கள் ஆர்வம் காட்டியது அதிகாரிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு: அமர்நாத் யாத்திரை பாதிப்பு
காஷ்மீரில் பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதால், அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
2. காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி சுட்டுக் கொலை
காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
3. காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி 6 மாதங்கள் நீட்டிப்பு - மாநிலங்களவையில் நிறைவேறியது
காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பதற்கான மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.
4. காஷ்மீரில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அமர்நாத் யாத்திரை துவங்கியது
ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அமர்நாத் யாத்திரை துவங்கியது.
5. காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடனான சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடனான சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.