மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு உயர்வு


மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு உயர்வு
x
தினத்தந்தி 21 Feb 2019 5:32 AM GMT (Updated: 21 Feb 2019 5:32 AM GMT)

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு உயர்ந்து காணப்பட்டது.

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 8.47 புள்ளிகள் உயர்ந்து 35,764.73 புள்ளிகளாக உள்ளன.  இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 6.05 புள்ளிகள் உயர்ந்து 10,741.50 புள்ளிகளாக உள்ளன.

இதில் சென்செக்ஸ் குறியீட்டில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, வேதாந்தா, ஓ.என்.ஜி.சி., எஸ்.பி.ஐ., எச்.யூ.எல். பஜாஜ் பைனான்ஸ், டாட்டா மோட்டார்ஸ், சன் பார்மா மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை 2.23 சதவீத லாபத்துடன் காணப்பட்டன.

இதேபோன்று இன்போசிஸ், எஸ் வங்கி, பாரதி ஏர்டெல், எம் அண்டு எம், கோல் இண்டியா மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி ஆகியவை 1.28 சதவீத நஷ்டத்துடன் காணப்பட்டன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 9 பைசாக்கள் உயர்ந்து ரூ.71.02 ஆக உள்ளது.

Next Story