இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக உள்ளது: பிரதமர் மோடி


இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக உள்ளது: பிரதமர் மோடி
x
தினத்தந்தி 21 Feb 2019 7:10 AM GMT (Updated: 21 Feb 2019 7:41 AM GMT)

இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக உள்ளது என்று தென்கொரிய வர்த்தக கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார்.

சியோல், 

இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக உள்ளது எனவும்  பொருளாதாரத்தில் 5 டிரில்லியன் டாலரை விரைவில் இந்தியா எட்ட இருப்பதாகவும் பிரதமர் மோடி பேசினார்.  இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக தென்கொரியா சென்றுள்ள பிரதமர் மோடி, தலைநகர் சியோலில், தொழில் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது, பிரதமர் மோடி பேசுகையில், “ இந்தியா தற்போது திறந்த பொருளாதார நாடாக மாறியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 250 பில்லியன் டாலர் அன்னிய நேரடி முதலீட்டை கவர்ந்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை வேறு எந்த மிகப்பெரிய பொருளாதார நாடுகளும் எட்டவில்லை. 

சீர்திருத்தங்களின் விளைவாக தொழில் புரிவதற்கு உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 77-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. வாய்ப்புகளுக்கான நிலமாக இந்தியா மாறியுள்ளது. இந்தியர்களின் கனவை உணர்ந்து அதை நோக்கி நாம் செயல்படும் அதேவேளையில், ஒத்த கருத்து கொண்ட கூட்டாளிகளை நாடுகிறோம். தென்கொரியாவை உண்மையான இயற்கை கூட்டாளியாக நாங்கள் பார்க்கிறோம்” என்றார். 

Next Story