தேசிய செய்திகள்

3 கிலோ மாட்டிறைச்சியை தேடி கண்டுபிடித்த மோடியால் 350 கிலோ வெடிமருந்தை கண்டுபிடிக்க முடியவில்லை - காங்கிரஸ் + "||" + PM Modi can trace 3 kg beef, but not 350kg RDX: Congress ramps up attack over Pulwama

3 கிலோ மாட்டிறைச்சியை தேடி கண்டுபிடித்த மோடியால் 350 கிலோ வெடிமருந்தை கண்டுபிடிக்க முடியவில்லை - காங்கிரஸ்

3 கிலோ மாட்டிறைச்சியை தேடி கண்டுபிடித்த மோடியால் 350 கிலோ வெடிமருந்தை கண்டுபிடிக்க முடியவில்லை - காங்கிரஸ்
3 கிலோ மாட்டிறைச்சியை தேடி கண்டுபிடித்த மோடியால் 350 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தை கண்டுபிடிக்க முடியவில்லை என புல்வாமா தாக்குதல் குறித்து காங்கிரஸ் மோடியை குற்றஞ்சாட்டி உள்ளது.
புதுடெல்லி,

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்தனர்.  இந்த கார் குண்டு தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 

இந்த தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பாரதீய ஜனதா அரசை குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

டெல்லியில் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான  ஹரூன் யூசுப்,   உளவுத்துறை எச்சரிக்கைகளை   கேட்க தவறியதாக மோடி  அரசு மீது குற்றம் சாட்டி உள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது;-

நரேந்திர மோடி ஜியால் 3 கிலோ மாட்டிறைச்சியை  தேடி கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால் 350 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை என கூறி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. புல்வாமா தாக்குதலில் புதுவகை ”சிம் கார்டு” பயன்பாடு: அமெரிக்காவின் உதவியை நாடுகிறது இந்தியா
புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அடில் தார் ”விர்ச்சுவல் சிம்” என்ற புதுவகையான சிம் கார்டினை பயன்படுத்தியதை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
2. என்.ஆர்.காங்கிரஸ் அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி நாராயணசாமி தாக்கு
இந்த நாடாளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அமைத்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியாகும் என்று நாராயணசாமி கடுமையாக தாக்கி பேசினார்.
3. ராகுல் காந்தியை அமேதி தொகுதி மக்கள் நிராகரித்துவிட்டனர் - ஸ்மிருதி இரானி
நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிடுமாறு ராகுல் காந்தியை கேரள காங்கிரஸ் தலைவர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
4. புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதியின் கூட்டாளி கைது
காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் முத்தாசிர். சமீபத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் அவன் கொல்லப்பட்டான்.
5. பீகாரில் காங்கிரஸ்-ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி உறுதியானது
பீகாரில் காங்கிரஸ் - ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி உறுதியானது.