தேசிய செய்திகள்

புல்வாமா தாக்குதலின் போது பிரதமர் மோடி படப்பிடிப்பில் ‘பிஸி’ - காங்கிரஸ் குற்றச்சாட்டு + "||" + PM continued shooting for documentary after Pulwama attack, alleges Congress

புல்வாமா தாக்குதலின் போது பிரதமர் மோடி படப்பிடிப்பில் ‘பிஸி’ - காங்கிரஸ் குற்றச்சாட்டு

புல்வாமா தாக்குதலின் போது பிரதமர் மோடி படப்பிடிப்பில் ‘பிஸி’ - காங்கிரஸ் குற்றச்சாட்டு
புல்வாமா தாக்குதலின் போது பிரதமர் மோடி படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

பிப்ரவரி 14-ம் தேதி பிற்பகல் 3.10 மணியளவில் பயங்கரவாத தாக்குதல் புல்வாமாவில் நடைபெற்றது, ஆனால் பிரதமர் மோடி தன்னுடைய சுயவிளம்பரத்திற்காக ஆவணப்பட படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருந்தார் என கங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா பேசுகையில், பத்திரிக்கை தகவலை சுட்டிக்காட்டி புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதல் 3.10 மணியளவில் நடந்துள்ளது. காங்கிரஸ் கட்சியிடமிருந்து மாலை 5.15 மணியளவில் பதில் தெரிவிக்கப்பட்டது. இதனை பிரதமர் மோடியும் அறிவார். தன்னை மிகப்பெரிய தேசப்பற்றாளர் என அடையாளம் காட்டும் பிரதமர் மோடி ஆவணப்படத்திற்காக ராம்நகரில் உள்ள கார்பெட் பூங்காவில்  படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருந்துள்ளார். பிரதமர் மோடி பா.ஜனதாவினர் கோஷங்கள் முழங்க, கேமராக்களுடன் படகு சவாரியை மேற்கொண்டுள்ளார். 


  
புல்வாமா தாக்குதலால் வேதனையடைந்த இந்திய மக்கள் வீடுகளில் உணவை அருந்தாத நிலையில் பிரதமர் மோடி சொகுசு விடுதியில் டீ, சமோசாவை சாப்பிட்டுள்ளார். ஒருபுறம் இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில், பிரதமர் மோடியோ தன்னுடைய சுய விளம்பரத்திற்காக படப்பிடிப்பில் பிஸியாக இருந்துள்ளார். இந்த உலகத்தில் இதுபோன்ற பிரதமர் எங்காவது இருப்பார்களா? உண்மையில் எனக்கு இதுகுறித்து பேச வார்த்தைகளே இல்லை. பிரதமர் மோடி படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததற்கு பதிலாக அமைச்சரவையை கூட்டி உடனடி நடவடிக்கை தொடர்பாக முடிவை எடுத்து இருக்க வேண்டும் என கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதியின் கூட்டாளி கைது
காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் முத்தாசிர். சமீபத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் அவன் கொல்லப்பட்டான்.
2. பா.ஜனதாவின் அனைத்து காவலாளிகளும் திருடர்கள் ராகுல் காந்தி கடும் சாடல்
பா.ஜனதாவின் அனைத்து காவலாளிகளும் திருடர்கள் என ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
3. ‘தனிநபர் கருத்தை வைத்து வி‌ஷம் பரப்பாதீர்’ பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் பதில்
‘தனிநபர் கருத்தை வைத்து வி‌ஷம் பரப்பாதீர்’ என பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் பதிலுரைத்துள்ளது.
4. புல்வாமா தாக்குதல்: பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தின் டிக்கெட் வருமானத்தை கொடுக்க முடிவு
புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தின் டிக்கெட் வருமானத்தை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
5. உங்கள் குழந்தைகள் வாட்ச்மேனாக வேண்டுமா? மோடிக்கு வாக்களியுங்கள்... -மோடியை கிண்டல் செய்த கெஜ்ரிவால்
உங்கள் குழந்தைகள் வாட்ச்மேனாக வேண்டுமா? மோடிக்கு வாக்களியுங்கள்... என பிரதமர் மோடியை கெஜ்ரிவால் கிண்டல் செய்துள்ளார்.