தேசிய செய்திகள்

மாயாவதி, அகிலேஷ் யாதவ் தொகுதி பங்கீடு அறிவிப்பு: மோடிக்கு எதிராக சமாஜ்வாடி வேட்பாளரை களமிறக்குகிறது + "||" + Mayawati, Akhilesh Announce Seats for 2019 Polls, SP to Field Candidate Against Modi From Varanasi

மாயாவதி, அகிலேஷ் யாதவ் தொகுதி பங்கீடு அறிவிப்பு: மோடிக்கு எதிராக சமாஜ்வாடி வேட்பாளரை களமிறக்குகிறது

மாயாவதி, அகிலேஷ் யாதவ் தொகுதி பங்கீடு அறிவிப்பு: மோடிக்கு எதிராக சமாஜ்வாடி வேட்பாளரை களமிறக்குகிறது
மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் தொகுதி பங்கீடு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
லக்னோ,

80 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் அம்மாநிலத்தில் பெரிய கட்சிகளான சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணியை அறிவித்துள்ளன. இப்போது தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இரு கட்சிகளும் 75 தொகுதிகளை பகிர்ந்து கொள்கிறது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு 38 தொகுதிகளும், சமாஜ்வாடி கட்சிக்கு 37 தொகுதிகளும் வழங்கப்படுகிறது. முன்னதாக இரு கட்சிகளும் சமமான தொகுதிகளில் போட்டியிடலாம் என தகவல் வெளியாகியது. இப்போது தன்னுடைய ஒரு தொகுதியை சமாஜ்வாடி கட்சி ராஷ்டீரிய லோக் தள் கட்சிக்கு வழங்கியுள்ளது.

பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியிலும், யோகி ஆதித்யநாத்தின் பாராளுமன்றத் தொகுதியாக இருந்த கோரக்பூரிலும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளரை களமிறக்குகிறது. சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலி மற்றும் ராகுலின் அமேதி தொகுதியிலும் போட்டியில்லை என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இரு தொகுதிகளிலும் வேட்பாளர் அறிவிப்பு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே உ.பி.யில் மகா கூட்டணி என்பதற்கு காங்கிரசுக்கு இருந்த கடைசி வாய்ப்பும் அடைக்கப்பட்டுள்ளது. இறுதி நேரத்தில் கூட்டணியில் மாற்றம் இருக்கலாம் என யோசிக்கப்பட்டது. ஆனால் அது இல்லாமல் சென்றது. 

தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜனதா அதனுடைய வெறுப்பு அரசியலால் தோல்வி அடையும் - மாயாவதி பேச்சு
பா.ஜனதா அதனுடைய வெறுப்பு அரசியலால் தோல்வி அடையும் என மாயாவதி பேசியுள்ளார்.
2. மக்கள் விரும்பியதாலேயே அரசு செலவில் எனது சிலைகளை வைத்தேன்: மாயாவதி
மக்கள் விருப்பத்தின்படியே தனது சிலைகளை அமைத்ததாக மாயாவதி தனது செயலை நியாயப்படுத்தி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
3. முலாயம்சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு : சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
முலாயம்சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
4. தேர்தலில் போட்டியில்லை... பிரதமருக்கான போட்டியில் இருக்கிறேன் - மாயாவதி
2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என மாயாவதி கூறியுள்ளார்.
5. நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை -மாயாவதி பேட்டி
நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.