ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 22 Feb 2019 3:04 PM GMT (Updated: 2019-02-22T20:34:45+05:30)

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவின் சோபூரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதனைதொடர்ந்து இன்று அதிகாலை அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.

இருதரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து நீடித்து வரும் துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். 

இது குறித்து தெற்கு காஷ்மீ்ர் பகுதி டிஐஜி அதுல் குமார் கோயல் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைசேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பாதிப்பில்லை.  கொல்லப்பட்டவர்கள் குறித்து அடையாளம் காணப்பட்டு வருகிறது.  

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story