தென் கொரியசுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி


தென் கொரியசுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 22 Feb 2019 6:19 PM GMT (Updated: 22 Feb 2019 6:19 PM GMT)

தென் கொரியசுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தென் கொரியாவிற்க்கு நேற்று சென்றார்.  தலைநகர் சியோலில் தரையிறங்கிய அவருக்கு சிகப்பு கம்பளம் அளித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்கொரியா நாட்டுக்கு பிரதமர் மோடி செல்வது இது இரண்டாவது முறையாகும். 

 2-வது நாளான இன்று தென் கொரிய அதிபர் மூன் ஜாவுடன் பிரதமர் மோடி உரையாடினார். இந்தச் சந்திப்பின்போது,  இரு தலைவர்களும் பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, பரஸ்பர நட்புறவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர். 

அதனை தொடர்ந்து தென் கொரிய அரசின் அமைதிக்கான விருதை இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.  விருதுடன் 2 லட்சம் அமெரிக்க டாலரும் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்டது. தென்கொரிய அரசு வழங்கியுள்ள விருது இந்திய மக்களுக்கு சொந்தமானது என  பின்னர் பேசிய மோடி தெரிவித்தார்.

கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் இந்த விருதை, தென் கொரிய அரசு வழங்கி வருகிறது. ஐ.நா.-வின் முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான், ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கல் ஆகியோர் இதற்கு முன்பு இந்த விருதைப் பெற்றுள்ளனர். இந்த விருதைப் பெற்றுள்ள 14-ஆவது நபர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் தென் கொரியசுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு பிரதமர் மோடி டெல்லி  திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை வரவேற்பதாக பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் என  டெல்லி விமான நிலையத்தில்  காத்துக்கொண்டிருந்தனர். தொண்டர்களை பார்த்ததும் பிரதமர் மோடி உற்சாகமாக கையசைத்து விட்டு காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

Next Story