காஷ்மீரிகள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை - மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்


காஷ்மீரிகள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை - மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 22 Feb 2019 10:15 PM GMT (Updated: 22 Feb 2019 9:54 PM GMT)

காஷ்மீரிகள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

காஷ்மீரில் துணை ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். இதனால் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டதுடன், பல இடங்களில் காஷ்மீரிகள் மீது தாக்குதல்களும் அரங்கேறின. குறிப்பாக வெளிமாநிலங்களில் தங்கி பயின்று வரும் காஷ்மீர் மாணவர்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் நடந்தன.

இதைத்தொடர்ந்து காஷ்மீரிகளுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது காஷ்மீரிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.க் களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் இத்தகைய தாக்குதல்கள் நேராமல் தடுக்குமாறு உத்தரபிரதேசம், மராட்டியம், பஞ்சாப், டெல்லி, பீகார் உள்ளிட்ட 11 மாநிலங்களின் தலைமைச் செயலாளர் கள், டி.ஜி.பி.க் களுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யுமாறும் வலியுறுத்தினர். காஷ்மீரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.


Next Story