தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது + "||" + Yasin Malik detained ahead of Supreme Court hearing on Article 35A

ஜம்மு காஷ்மீர்: பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது

ஜம்மு காஷ்மீர்: பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது
ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 35-ஏ வை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு வரும் என தகவல்கள் கூறுகின்றன. 

இதன்காரணமாக காஷ்மீரில் பதற்றம் ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான யாசின் மாலிக்கை போலீசார் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். எனினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் போர்நிறுத்த மீறல் : துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் வீரமரணம்
நவ்ஷெரா பகுதி எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் போர்நிறுத்தத்தை ஒப்பந்தத்தை மீறி நடத்திய தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
2. ஜம்மு காஷ்மீர் காங்.தலைவர் கைது : ராகுல் காந்தி கண்டனம்
ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
3. ஜம்மு காஷ்மீர்: ஸ்ரீநகரில் தேசியக்கொடி ஏற்றினார் ஆளுநர் சத்யபால் மாலிக்
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் ஆளுநர் சத்யபால் மாலிக் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
4. காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுடன் எப்போதும் உடன்நிற்போம் - பிரதமர் மோடி உறுதி
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுடன் எப்போதும் உறுதுணையாக நிற்போம் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
5. வரும் 5 ஆண்டுகளில் காஷ்மீரில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும் : அமித்ஷா
வரும் 5 ஆண்டுகளில் காஷ்மீரில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.