தேசிய செய்திகள்

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான மறு ஆய்வு மனுக்களை பிப்.26-ல் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் + "||" + SC to hear Rafale review plea on February 26

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான மறு ஆய்வு மனுக்களை பிப்.26-ல் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான மறு ஆய்வு மனுக்களை பிப்.26-ல் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான மறு ஆய்வு மனுக்களை பிப்ரவரி 26 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
புதுடெல்லி,

பிரான்சிடமிருந்து, ரபேல் ரக போர் விமானங்கள் வாங்க, மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.  இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. 

இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன.அவற்றை விசாரித்த உச்சநீதிமன்றம்,  கடந்த டிசம்பரில் தீர்ப்பு அளித்தது. அதில், ரபேல் போர் விமானம் வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்யும் நடைமுறையில், எந்த மோசடியும் நடந்ததற்கான சந்தேகம் எழவில்லை' என, தீர்ப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனு மீதான விசாரணை வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதானா? என அன்றைய தினம் முடிவு செய்கிறது.