காஷ்மீருக்காகத்தான் போர் புரிகிறோம், காஷ்மீருக்கு எதிராக அல்ல - பிரதமர் மோடி பேச்சு


காஷ்மீருக்காகத்தான் போர் புரிகிறோம், காஷ்மீருக்கு எதிராக அல்ல - பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 23 Feb 2019 11:05 AM GMT (Updated: 23 Feb 2019 11:05 AM GMT)

காஷ்மீருக்காகத்தான் போர் புரிகிறோம், காஷ்மீருக்கு எதிராக அல்ல என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டோங்க்,

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:

காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தோடு இந்தியா மட்டுமல்லாமல், உலகமும் உள்ளது. காஷ்மீர் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் 100 மணி நேரத்திற்குள் பழிவாங்கியது. காஷ்மீர் மக்களும் பயங்கரவாதத்தால், 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அமைதியை தான் விரும்புகின்றனர். 

காஷ்மீர் மாணவர்களை தாக்குவது போன்ற சம்பவம் இனி எங்கும் நடைபெறக்கூடாது; காஷ்மீருக்காகத்தான் போர் புரிகிறோம், காஷ்மீருக்கு எதிராக அல்ல. பயங்கரவாதம், மனிதநேய எதிரிகளுக்கு எதிராகத்தான் நாம் போராடி வருகிறோம். காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story