தேசிய செய்திகள்

அரசியலில் ஈடுபட ராபர்ட் வதேரா விருப்பம் + "||" + Robert Vadra wish to engage in politics

அரசியலில் ஈடுபட ராபர்ட் வதேரா விருப்பம்

அரசியலில் ஈடுபட ராபர்ட் வதேரா விருப்பம்
அரசியலில் ஈடுபட ராபர்ட் வதேரா விருப்பம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா தன்னுடைய முகநூல் பதிவில், ‘‘நான் ஆண்டுக்கணக்கில், மாதக்கணக்கில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்துள்ளேன். குறிப்பாக உத்தரபிரதேச மக்களுக்கு நான் அதிகம் செய்ய விரும்புகிறேன். இத்தனை ஆண்டுகாலமாக நான் பெற்ற அனுபவங்களை வீணடிக்க விரும்பவில்லை. என் மீதான குற்றச்சாட்டுகள், விசாரணை முடிந்த பிறகு மக்களுக்கு சேவை செய்வதில் பெரிய பங்களிப்பை அளிக்க விரும்புகிறேன்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.


ராபர்ட் வதேராவின் இந்த முகநூல் பதிவு அவர் நேரடி அரசியலுக்கு வர விரும்புவதாக செய்திகள் பரவின.

இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா கூறுகையில், ‘‘ராபர்ட் வதேரா தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பு உடையவர். அந்த வகையில் அவர் மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக தெரிவித்து இருக்கிறார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடியிடம் அனுமதி பெற வேண்டுமா?’’ என்றார்.

அதே சமயம் இது குறித்து பா.ஜனதா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ‘‘தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் அறிமுகம்’’ என கிண்டல் செய்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி
சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
2. ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்: இன்று ஆஜராக உத்தரவு
சட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டில், விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
3. இந்திய கொடி கூடவா இவருக்கு தெரியாது! சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா காந்தியின் கணவர்!
இந்திய கொடிக்கு பதில் வேறு நாட்டு கொடியை ட்விட்டரில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா காந்தியின் கணவர்!
4. அமலாக்கத்துறை வழக்கு: ராபர்ட் வதேராவை 19-ந் தேதி வரை கைது செய்ய தடை - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
அமலாக்கத்துறை வழக்கில் ராபர்ட் வதேராவை 19-ந் தேதி வரை கைது செய்ய தடை விதித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.