பாதுகாப்பு படையினரின் மனித உரிமைகளை காக்க ராணுவ அதிகாரிகளின் மகள்கள் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணை


பாதுகாப்பு படையினரின் மனித உரிமைகளை காக்க ராணுவ அதிகாரிகளின் மகள்கள் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணை
x
தினத்தந்தி 25 Feb 2019 2:01 AM GMT (Updated: 25 Feb 2019 2:01 AM GMT)

பாதுகாப்பு படையினரின் மனித உரிமைகளை காக்க ராணுவ அதிகாரிகளின் மகள்கள் தொடரந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்கிறது.

புதுடெல்லி, 

ராணுவ அதிகாரிகளின் மகள்களான பிரீதி கேதார் கோகலே (வயது 19), கஜல் மிஷ்ரா (20) ஆகிய இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடுத்து உள்ளனர். அந்த வழக்கில், பாதுகாப்பு படைகளில் பணியாற்றுவோரின் மனித உரிமைகளை காக்க விரிவான கொள்கை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உள்ளனர்.

குறிப்பாக பணியின்போது, தனிநபர்களாலும், கட்டுக்கடங்காத கும்பல்களாலும் தாக்கப்படுகிற பாதுகாப்பு படையினரின் மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்று இந்த வழக்கின் மூலம் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது வன்முறை கும்பலால் நடத்தப்பட்ட கல்வீச்சுகளை வழக்கில் சுட்டிக்காட்டி உள்ளனர்.இந்த வழக்கில் எதிர் தரப்பினராக மத்திய அரசு, ராணுவ அமைச்சகம், காஷ்மீர் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் சேர்க்கப்பட்டுள்ளன.இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பாக இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது.


Next Story