புல்வாமா தாக்குதல் குறித்து நீதி விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்


புல்வாமா தாக்குதல் குறித்து நீதி விசாரணை கோரிய  மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
x
தினத்தந்தி 25 Feb 2019 6:42 AM GMT (Updated: 25 Feb 2019 7:28 AM GMT)

புல்வாமா பயங்கரவாத தாக்குதல் குறித்து நீதி விசாரணை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி,

புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னணியில் மிகப்பெரிய சதிச்செயல் இருப்பதாக கூறப்படுவதால், அது பற்றி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த பொதுநல மனு விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை வழக்கறிஞர் வினித் தண்டா என்பவர் தாக்கல் செய்து இருந்தார். தனது மனுவில், 40 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் மிகப்பெரிய சதி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, இது குறித்து நீதி விசாரணை வேண்டும் என கூறியிருந்தார். தாக்குதலுக்கு 370 கிலோ ஆர்.டி.எக்ஸ் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் முழு விசாரணை நடத்த வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Next Story