உ.பி.யை தொடர்ந்து மத்தியப் பிரதேசம், உத்தரகாண்டடிலும் மாயாவதி -அகிலேஷ் யாதவ் கூட்டணி


உ.பி.யை தொடர்ந்து மத்தியப் பிரதேசம், உத்தரகாண்டடிலும் மாயாவதி -அகிலேஷ் யாதவ் கூட்டணி
x
தினத்தந்தி 25 Feb 2019 12:45 PM GMT (Updated: 25 Feb 2019 12:45 PM GMT)

உ.பி.யை தொடர்ந்து மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்திலும் மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். இது காங்கிரஸ் கட்சிக்கு தலைவலியை கொடுத்து உள்ளது.

புதுடெல்லி 

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி 37 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், மாயாவதி கட்சிக்கு 38 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஒரு மக்களவை எம்பி கூட இல்லாத பகுஜன்சமாஜ் கட்சிக்கு எந்த அடிப்படையில் 38 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன என்று அகிலேஷின் தந்தை முலாயம்சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தை தொடர்ந்து, மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட இருப்பதாக மாயவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிகள் அறிவித்துள்ளன.

மத்தியப் பிரதேசத்தில் 3 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சியும், எஞ்சிய 26 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சியும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி ஒரு தொகுதியிலும், பகுஜன் சமாஜ் கட்சி எஞ்சிய 4 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் தொடரும் மற்ற கட்சிகளின் கூட்டணி அறிவிப்புகள், காங்கிரஸ் கட்சிக்கு பலவீனமாகவே முடிய வாய்ப்புள்ளது.

Next Story