விமானப்படை தாக்குதல்: விடிய விடிய விழித்திருந்த பிரதமர் மோடி


விமானப்படை தாக்குதல்: விடிய விடிய விழித்திருந்த பிரதமர் மோடி
x
தினத்தந்தி 26 Feb 2019 11:47 PM GMT (Updated: 26 Feb 2019 11:47 PM GMT)

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது நேற்று அதிகாலை இந்திய விமானப்படை வான் தாக்குதலில் ஈடுபட்டது.

புதுடெல்லி, 

பிரதமர் நரேந்திர மோடி இரவு முழுவதும் விழித்திருந்து இதனை கண்காணித்தபடி இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. திங்கட்கிழமை இரவு தாஜ் பேலஸ் ஓட்டலில் நடைபெற்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, 9.25 மணிக்கு வீடு திரும்பினார். இரவு உணவை முடித்துவிட்டு வான் தாக்குதல் ஆயத்த பணிகளை கண்காணித்தார்.

அவர் வீட்டிலேயே இருந்தாரா? அல்லது ஏதாவது கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்தாரா? என்பது தெரியவில்லை. ஆனால் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், விமானப்படை தலைவர் பி.எஸ்.தானோவ் ஆகியோருடன் தொடர்பில் இருந்தார். 

தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக இந்தியாவுக்கு திரும்பிய பின்னரே அவர் சற்று ஓய்வெடுக்க சென்றார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவித்தது. 

அதிகாலை 4.30 மணிக்கு இந்த தாக்குதலில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். அதோடு நேற்று பகல் முழுவதும் அவர் தனது அன்றாட பணிகளை தொடர்ந்து கவனித்தார்.


Next Story