தேசிய செய்திகள்

காஷ்மீரில் பாதுகாப்பு படை மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை + "||" + Encounter underway in Kashmir valley

காஷ்மீரில் பாதுகாப்பு படை மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை

காஷ்மீரில் பாதுகாப்பு படை மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் மற்றும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் மீமெந்தர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்று இன்று காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் படையினரை நோக்கி தீவிரவாதிகள் பதுங்கி இருந்து திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  அவர்களுக்கு பாதுகாப்பு படை வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.  இந்த சம்பவத்தில் வீரர்கள் தரப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து 80 கி.மீட்டர் தொலைவில் பாலகோட் பகுதியில் முகாமிட்டிருந்த ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதிகள் மீது இந்தியா நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது.  இதில் தீவிரவாதிகள், தீவிரவாத பயிற்சி பெறுவோர் மற்றும் மூத்த தளபதிகள் உள்பட 350 பேர் கொல்லப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் பாதுகாப்பு படை அதிரடியில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை
காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் அதிரடி சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
2. காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பத்காம் பகுதியில் நடந்த என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
3. காஷ்மீரில் தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகளின் பதுங்கு குழி கண்டறியப்பட்டது
காஷ்மீரின் சோபியான் நகரில் நடந்த தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகளின் பதுங்கு குழி கண்டறியப்பட்டு உள்ளது.
4. காஷ்மீரில் துப்பாக்கி சண்டை; 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை, 5 வீரர்கள் பலி
காஷ்மீரில் நடந்து வரும் துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் மற்றும் 5 வீரர்கள் பலியாகி உள்ளனர்.
5. காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு; 2 தீவிரவாதிகள் பிடிபட்டனர் என தகவல்
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் பிடிபட்டனர் என தகவல் வெளிவந்து உள்ளது.