டி.ஜி.பி.க்கள் நியமனம் தொடர்பான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை


டி.ஜி.பி.க்கள் நியமனம் தொடர்பான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
x
தினத்தந்தி 27 Feb 2019 10:20 PM GMT (Updated: 27 Feb 2019 10:20 PM GMT)

டி.ஜி.பி. நியமன விவகாரத்தில் மாநில அரசுகள் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றம் சாட்டி ஓய்வு பெற்ற டி.ஜி.பி.க்கள் பிரகாஷ் சிங், என்.கே.சிங் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனுக்களை தாக்கல் செய்தனர்.

புதுடெல்லி, 

மனுக்கள் மீது கடந்த 2006–ம் ஆண்டு, மற்றும் 2018–ம் ஆண்டுகளில் சுப்ரீம் கோர்ட்டு பல உத்தரவுகளை பிறப்பித்தது.

அந்த உத்தரவில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், எந்த போலீஸ் அதிகாரியையும் இடைக்கால டி.ஜி.பி.யாக நியமிக்கக் கூடாது. டி.ஜி.பி., போலீஸ் கமி‌ஷனர் ஆகிய பதவிகளில் நியமிக்க தகுதியான அதிகாரிகளின் பெயர்களை மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு (யு.பி.எஸ்.சி.) அனுப்பி வைக்க வேண்டும்.

அப்பெயர்களில், மிகவும் தகுதி வாய்ந்த 3 பேர் கொண்ட பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையம் இறுதி செய்யும். அந்த 3 பேரில் ஒருவரை மாநில, யூனியன் பிரதேச அரசுகளே தேர்வு செய்து, டி.ஜி.பி.யாக நியமித்துக் கொள்ளலாம். இந்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி மாநில அரசுகள் எங்களை அணுகலாம் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு இது தொடர்பாக திருத்தம் கோரும் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவின் மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.


Next Story