‘அமெரிக்கா செய்ததை நம்மாலும் செய்ய முடியும்’ அருண் ஜெட்லி கருத்து


‘அமெரிக்கா செய்ததை நம்மாலும் செய்ய முடியும்’ அருண் ஜெட்லி கருத்து
x
தினத்தந்தி 27 Feb 2019 10:47 PM GMT (Updated: 27 Feb 2019 10:47 PM GMT)

பின்லேடனை நினைவு கூர்ந்தார். ‘அமெரிக்கா செய்ததை நம்மாலும் செய்ய முடியும்’ என அருண் ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

புலவாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்திய போர் விமானங்கள் சென்று பதிலடி தந்ததால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில் டெல்லியில் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் இயக்க நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று பங்கேற்று பேசினார்.

அப்போது அவர், பாகிஸ்தானில் அப்போட்டாபாத் நகரில் பதுங்கி இருந்த அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் பின்லேடனை கொல்வதற்கு அமெரிக்கா எடுத்த அதிரடி நடவடிக்கையை நினைவு கூர்ந்தார்.

அப்போது அவர், ‘‘பின்லேடனை அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவு அதிரடியாக கொன்றது. நம்மாலும் இதைப்போன்று செய்ய முடியாதா என்றால் முடியும். இதுவரை நினைத்து பார்த்திராத வகையில், இந்தியா எதையும் செய்ய முடியும் என்பதை விமானப்படை தாக்குதல் நிரூபித்துக்காட்டி உள்ளது’’ என குறிப்பிட்டார்.

இதே கருத்தை ராம் மாதவ் போன்ற பாரதீய ஜனதா தலைவர்களும் ஆமோதித்தனர்.


Next Story