இந்தியாவின் மகன் அபிநந்தனுக்காக முதல் முறையாக வரலாற்று நிகழ்வை கைவிட்ட இந்தியா - பாகிஸ்தான்!!


இந்தியாவின் மகன் அபிநந்தனுக்காக முதல் முறையாக வரலாற்று நிகழ்வை கைவிட்ட இந்தியா - பாகிஸ்தான்!!
x
தினத்தந்தி 1 March 2019 7:35 PM IST (Updated: 1 March 2019 7:35 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் மகன் அபிநந்தனுக்காக முதல் முறையாக இந்தியா - பாகிஸ்தான் இன்று வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்படும் விமானப்படை வீரர் அபிநந்தன் ராவல்பிண்டி ராணுவ முகாமில் இருந்து லாகூருக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டார். பின்னர் லாகூரில் இருந்து சாலை மார்க்கமாக வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்து வரப்பட்டார். 

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுடன் பாகிஸ்தான் இராணுவ வாகனங்கள்  புடை சூழ வாகா எல்லை வந்தடைந்தது. வாகா எல்லை வந்தடைந்த அபிநந்தன்,  அமிர்தசரஸ் துணை ஆணையாளர் சிவ் துலர் சிங் தில்லான், இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். 

அபிநந்தனை இந்தியா வசம் ஒப்படைக்க இறுதிகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியா அழைத்து வரப்பட்ட அபிநந்தனுக்கு முழு மருத்துவ பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

அபிநந்தன் ஒப்படைக்கப்படுவதையொட்டி, வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. கொடி இறக்கம் என்பது சூரியன் மறைவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னர் நிகழ்த்தப்படும். ஆனால், இன்று இந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த தற்கொலை தாக்குதல் காரணமாகவும், 2016 ஆம் ஆண்டு நடந்த இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் காரணமாக கொடி இறக்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், முதல் முறையாக ஒரு தனிநபர் இந்திய எல்லைக்குள் வருவதற்காக கொடி இறக்கம் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

வாகா எல்லை வந்தடைந்த அபிநந்தனுக்கு அங்கிருந்த இந்திய மக்கள் பாரத் மாதா கி ஜே.. ஜெய்ஹிந்த்.. என்ற கோஷங்களை எழுப்பினர்.  கடந்த 27-ம் தேதி பாகிஸ்தான் வசம் சிக்கிய அபிநந்தன் இன்று தாயகம் திரும்பினார்.

Next Story