உ.பி.யில் 20 தொகுதிகளில் கணிசமாக வாழும் படகோட்டிகளை வளைக்க பா.ஜனதா தீவிரம்
உத்தரபிரதேசத்தில் படகோட்டி சமூகத்தினர் சுமார் 20 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவர்களாக உள்ளனர்.
லக்னோ,
கடந்த ஆண்டு நடந்த கோரக்பூர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில், சமாஜ்வாடி கட்சி நிறுத்திய படகோட்டி சமூக வேட்பாளர்தான், பா.ஜனதாவை தோற்கடித்தார். இதனால், உத்தரபிரதேசத்தில் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றுவதற்காக படகோட்டி சமூகத்தினரை கவரும் பணிகளில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளது.
சமீபத்தில், கும்பமேளாவுக்கு சென்ற பிரதமர் மோடி, தன்னை படகோட்டிகளின் முக்கிய சேவகன் என்று வர்ணித்துக்கொண்டார். படகோட்டி இல்லாவிட்டால், ராமாயணமே முழுமை பெற்றிருக்காது என்றும் அவர் கூறினார்.
மேலும், பா.ஜனதா தலைவர் அமித் ஷா, காஜிப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு படகோட்டியின் படகில் சென்று கவனத்தை ஈர்த்தார்.
Related Tags :
Next Story