‘‘தாயகம் திரும்பியது நல்ல வி‌ஷயம்’’ அபிநந்தன் முதல் கருத்து

x
தினத்தந்தி 2 March 2019 7:10 AM IST (Updated: 2 March 2019 7:10 AM IST)
t-max-icont-min-icon

இந்திய விமானி அபிநந்தன், வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்திய பகுதியில் கால் வைத்தவுடன், அபிநந்தன் ‘‘என் தாயகத்துக்கு திரும்பியது நல்ல வி‌ஷயம்’’ என்று கூறினார். அவரை வரவேற்று அழைத்துச்செல்ல வந்த ஒரு அதிகாரி, இத்தகவலை ஊடகங்களிடம் தெரிவித்தார்.

புதுடெல்லி,

மேலும், இந்திய விமானப்படை துணை தளபதி ஆர்.ஜி.கே.கபூர் நிருபர்களிடையே ஒரு அறிக்கையை வாசித்தார். அதில், ‘‘விமானி அபிநந்தன் நிறைய மன அழுத்தத்துக்கு உட்படுத்தப்பட்டு இருப்பார். அதனால், அவரை முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்கிறோம்’’ என்றார்.

Next Story