9 மாத குழந்தை உள்பட 3 பேர் சுட்டுக்கொலை பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல்
9 மாத குழந்தை உள்பட 3 பேர் சுட்டுக்கொலை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது.
ஸ்ரீநகர்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இராணுவம் செயல்பட்டு வருவதால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. கஜோரி, போஜ் மாவட்டங்களில் மக்கள் வசிக்கும் இடங்களில் புகுந்து பாகிஸ்தான் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தான் இராணுவத்தினர் நவீனரக துப்பாக்கிகளை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பூஞ்ச் மாவட்டத்தில் 9 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே உட்பாரா மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியும் நடந்து வருகிறது.இதனால், இந்திய இராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்ற நிலையில் 5 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
Related Tags :
Next Story