புதுவையில் ரூ.2,703 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு


புதுவையில் ரூ.2,703 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 2 March 2019 12:57 PM IST (Updated: 2 March 2019 1:38 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் 2 ஆயிரத்து 703 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் பொறுப்பை வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.

புதுச்சேரி,

ஒவ்வொரு மாநிலத்திலும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.

புதுவையில் பல ஆண்டுகளாக இவ்வாறு பட்ஜெட் தாக்கல் செய்ய முடியவில்லை. புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசு குறிப்பிட்ட அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும்.

இதில் ஏற்படும் தாமதங்களால் முழு ஆண்டு பட்ஜெட்டையும் கணக்கிட்டு தாக்கல் செய்ய முடியவில்லை.

எனவே, நிதியாண்டின் முதல் சில மாத செலவினங்களுக்கான தொகை மட்டும் ஒதுக்கீடு செய்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

அதன்படி இன்று ஆகஸ்டு மாதம் வரை 5 மாத செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் பொறுப்பை வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் 6 மாத கால செலவினங்களுக்கு ரூ.2,703 கோடி ஒதுக்கீடு செய்து பட்ஜெட் அறிவிக்கப்பட்டது. பின்னர் சபையில் இது ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக ஆளுநருக்கு எதிரான முதலமைச்சரின் போராட்டம் உள்ளிட்டவற்றை கண்டித்து, சபாநாயகர் இருக்கை முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

பின்னர் சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைத்து சபாநாயகர் வைத்திலிங்கம் உத்தரவிட்டார்.

அடுத்த சட்டசபை கூட்டம் ஆகஸ்டு மாதம் நடத்தப்படும். அப்போது முழு ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

Next Story